நாட்டின் ஏற்றுமதி ரூ.12 லட்சம் கோடியாக வளர்ச்சி நாட்டின் ஏற்றுமதி ரூ.12 லட்சம் கோடியாக வளர்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ...
கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை:ரூ.1,667 ஆக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2012
10:01

சேலம்:கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை நேற்று, 1,667 ரூபாயாக அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களாக கமர்ஷியல் சிலிண்டர் விலை கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டே செல்வது வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஐ.ஓ.சி., ஹெச்.பி., பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ காஸ் சிலிண்டர்களையும், வணிக பயன்பாட்டிற்கான 19.2 கிலோ கமர்ஷியல் காஸ் சிலிண்டர்களையும் வினியோகிக்கின்றன.
அரசு மானியம் தருவதில்லை என்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து, மாதம்தோறும் கமர்ஷியல் சிலிண்டர் விலையை, ஆயில் நிறுவனங்கள் நிர்ணயிக்கும். 2009 ஜனவரியில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், கமர்ஷியல் சிலிண்டர் விலை, 758.35 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. அதன் பின், கமர்ஷியல் சிலிண்டர் விலை ஏறுமுகமாகவே இருந்தது. கடந்த ஜனவரி மாதம், 1,457.50 ரூபாயாக இருந்த கமர்ஷியல் சிலிண்டர் விலை, பிப்ரவரி மாதம், 1,546 ரூபாயாக அதிகரித்தது. இந்நிலையில், நேற்று மேலும், 121.52 ரூபாய் அதிகரித்து, 1,667.50 ரூபாயாக விலை உயர்ந்தது.
கடந்த சில மாதங்களாக கமர்ஷியல் சிலிண்டர் விலை, மாதம்தோறும் சராசரியாக, 100 ரூபாய் அதிகரித்துக் கொண்டே செல்வது வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், சில மாதங்களில் சிலிண்டர் விலை 2,000 தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என காஸ் ஏஜென்சியினர் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)