பதிவு செய்த நாள்
08 மார்2012
00:04
புதுடில்லி: நடப்பு 2011-12ம் ஆண்டு பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்), சர்வதேச அளவில் காபி உற்பத்தி, 13.24 கோடி மூட்டைகளாக குறையும். இது, இதற்கு முந்தைய காபி பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 1.3 சதவீதம் (13.42 கோடி மூட்டைகள்) குறைவு என, சர்வதேச காபி கவுன்சில் தெரிவித்துள்ளது.நடப்பு காபி பருவத்தில், அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாத காலத்தில், சர்வதேச அளவில், 60 கிலோ மூட்டை கொண்ட, 3.26 கோடி காபி மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 3 சதவீதம் (3.36 கோடி மூட்டைகள்) குறைவு. சென்ற ஜனவரி மாதத்தில், சர்வதேச காபி ஏற்றுமதி, 10 சதவீதம் சரிவடைந்து, 89 லட்சம் மூட்டைகளிலிருந்து, 80 லட்சம் மூட்டைகளாக குறைந்துள்ளது. நடப்பு 2012ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த, 12 மாத காலத்தின் இதன் ஏற்றுமதி, 10.35 கோடி மூட்டைகளாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின் ஜனவரி காலத்தில், 9.82 கோடி மூட்டைகளாக இருந்தது என, கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|