ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி சரிவுஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி சரிவு ... டாட்டா ஸ்டீல் உருக்கு விலை அதிகரிப்பு  டாட்டா ஸ்டீல் உருக்கு விலை அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாபே - கேப்டன் டிராக்டர்ஸ் வாகன தயாரிப்பு ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2012
00:06

ஆமதாபாத்: சென்னையை சேர்ந்த, டிராக்டர்ஸ் அண்டு பார்ம் எக்யுப்மென்ட் நிறுவனம் (டாபே), குஜராத்தை சேர்ந்த கேப்டன் டிராக்டர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.இதன்படி, டாபே நிறுவனத்திற்காக, 20 குதிரைத் திறன் வரையிலான டிராக்டர்களை, கேப்டன் டிராக்டர்ஸ் நிறுவனம் வடிவமைத்து தயாரித்து தர உள்ளது. மேற்கண்ட ஒப்பந்தத்தின் படி, வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில், டாபே நிறுவனத்திற்கான டிராக்டர்கள், கேப்டன் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகளிலிருந்து தயாரித்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், நாடு தழுவிய அளவில், கேப்டன் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் டீலர்கள், டாபே நிறுவனத்தின் டிராக்டர்கள் விற்பனையுடன் பழுது பார்ப்பு சேவையையும் வழங்குவர். ஆண்டுக்கு 130 கோடி டாலர் விற்பனை மதிப்பு கொண்ட டாபே நிறுவனம், இந்தியாவில், டிராக்டர்கள் தயாரிப்பில் 2வது இடத்தில் உள்ளது.தற்போது, இந்நிறுவனம், 25 முதல் 100 குதிரைத் திறன் கொண்ட டிராக்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. உள்நாடு தவிர, இந்நிறுவனத்தின் டிராக்டர்கள் 67 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கேப்டன் டிராக்டர்ஸ் நிறுவனம், 1998ம் ஆண்டு முதல் டிராக்டர்கள் தயாரிப்பில் ஈடுபடுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)