பதிவு செய்த நாள்
08 மார்2012
09:51

புதுடில்லி :நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் அலவன்ஸ் தொகையை உடனடியாகத் தராவிட்டால், ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பணிக்கு வரமாட்டோம் என, ஏர் இந்தியா விமான நிறுவன பைலட்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றும் பைலட்டுகளுக்கு மாதச் சம்பளம் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் சிரமத்திலும், கடும் அதிருப்தியிலும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என, பைலட்டுகள், இந்திய பைலட்டுகள் கில்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து, இந்திய பைலட்டுகள் கில்டு இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத்சிங், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியது. அதில், "ஏர் இந்தியா பைலட்டுகளுக்கு டிசம்பர் மாதம் முதல் சம்பளம் மற்றும் அலவன்சுகள் வழங்கப்படாமல் உள்ளது. சம்பளம் கிடைக்காமல், அவர்கள் நிதி நெருக்கடியில் சிரமப்படுகின்றனர். எனவே, அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கோரியுள்ளது.
இதுகுறித்து இந்திய பைலட்டுகள் கில்டின் தலைவர் ஜிதேந்திரா அவ்ஹாத் கூறுகையில், "எங்களது கில்டு உறுப்பினர்களை (பைலட்கள்) முடிந்தளவு போராட்டத்தில் ஈடுபடாமல், அவர்களை சமாதானப்படுத்த முயன்று வருகிறோம். இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காணவேண்டும்' என்றார். இவ்வாண்டில் பைலட்டுகள் இவ்வாறு கோரிக்கை விடுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|