பதிவு செய்த நாள்
08 மார்2012
12:42

உலகப்பணக்காரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள், அதில் இந்தியாவின் டாப் பணக்காரராக இந்தியாவின் முகேஷ் அம்பானி நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். இத்தகவலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
உலகின் டாப் 1226 பணக்காரர்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது. அதில் 69 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மெக்ஸிகோவின் கார்லோஸ் ஸ்லிம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக 61 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் இருக்கிறார்.
இந்தியாவின் முகேஷ் அம்பானி 22.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 19வது இடத்திலும், லக்ஷ்மி மிட்டல் 20.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 21வது இடத்திலும், விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி 15.9பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 41வது இடத்திலும், ஜிந்தல் குரூப் சாவித்ரி 10.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 80வது இடத்திலும், 8.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பார்தி எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் மிட்டல் 113வது இடத்திலும், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 7.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 118வது இடத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் தவிர இந்தியாவின் டி.எல்.எப்., கே.பி.சிங், ஹெச்.சி.எல் ஷிவ் நாடார், கோத்ரேஜ் - ஆதி கேத்ரேஜ், பஜாஜ் குரூப் தலைவர் ராகுல் பஜாஜ், இன்போசிஸ் நாராயண மூர்த்தி உள்ளிட்டவர்களும் போர்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 425 பேர் அமெரிக்கர்கள். இதில் 11 பேர் டாப்-20 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ரஷ்யர்கள் 98 பேரும், சீனர்கள் 55 பேரும், இந்தியர்கள் 48பேரும், ப்ரிட்டிஷ் நாட்டவர் 37பேரும், பிரேசிலியர்கள் 36பேரும், கனடா நாட்டினர் 25 பேரும் போர்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|