பதிவு செய்த நாள்
08 மார்2012
14:30

சென்னை : டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெற்றாலும், அதன் நிலைமை சரியாக இன்னும் ஒருவார காலமாகும் என்று கூறப்படுகிறது. புதிய வாடகை ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் தென்னிந்தியாவில் காஸ் தட்டுப்பாடு நிலவியது.
இந்நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சென்னையில் கடந்த 3-ந் தேதி தமிழக அரசு அதிகாரிகள், டேங்கர் லாரி உரிமையாளர்கள், ஆயில் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனையடுத்து மீண்டும் நேற்றும் இப்பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக நள்ளிரவில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர்.
டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றாலும், அதன் நிலைமை சீராக கிட்டத்தட்ட ஒருவார காலமாகும் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மேலும் ஓரிரு நாள் காஸ் தட்டுப்பாடு நிலவும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|