பதிவு செய்த நாள்
08 மார்2012
23:59

சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த பெடரல் பேங்க், ஒரே நாளில் 100 புதிய கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,மையங்களை நாளை திறக்க உள்ளது.இதுகுறித்து, இவ் வங்கியின் மண்டலத் தலைவர் டி.கே.பழனியப்பன் கூறியதாவது:வங்கியின் நவீன தொழில்நுட்ப வாயிலான வர்த்தக நடவடிக்கைகள், பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களையும் சென்றடையும் வகையில், மார்ச் 10ம் தேதி, நாடு முழுவதும் 100 கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.மையங்கள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 938 ஆக அதிகரிக்கும்.சென்னை மண்டலத்தில் மட்டும் 19 புதிய கிளைகள் அமைய உள்ளன. வரும் ஜூன் மாதத்திற்குள், வங்கிக் கிளைகளின் மொத்த எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புறநகர் மற்றும் கிராமங்களில், அதிக அளவில் கிளைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், வங்கியின் மொத்த வர்த்தகம் 80 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இக் காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 202 கோடி ரூபாயாக உள்ளது. இவ்வாறு பழனியப்பன் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|