பதிவு செய்த நாள்
09 மார்2012
00:01

மும்பை,: முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், எம்.சி.எக்ஸ்., நிறுவனத்தின் பங்குகள், இன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன.எம்.சி.எக்ஸ்,ல நிறுவனம், 35 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் வகையில், சென்ற பிப்ரவரி 22ம் தேதி, மூலதனச் சந்தையில் களமிறங்கி, பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.
பங்கு ஒன்றின் விலை 1,032 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. குறைந்த பட்சம் ஆறு பங்குகள் வீதம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 24ம் தேதியுடன் முடிவடைந்த இவ்வெளியீட்டில், முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகள் வேண்டி 54 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்தன.இதையடுத்து, பங்குகளை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில், 126 முதல் 192 பங்குகள் வரை விண்ணப்பித்தவர்களுக்கு 6-8 பங்குகள் வரை ஒதுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.குறைந்தபட்சம் 6 பங்குகள் வேண்டி விண்ணப்பித்தவர்களில், 13 பேருக்கு ஒருவர் வீதம், 6 பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதே போன்று 120 பங்குகள் வேண்டி விண்ணப்பித்தோரில், 13 பேருக்கு 11 பேர் வீதம், 6-8 பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.பங்கு ஒதுக்கீட்டுப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, எம்.சி.எக்ஸ்., நிறுவனத்தின் பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.இந்தியாவில், முதன்முதலாக முன்பேர சந்தை நிறுவனமொன்றின் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|