பதிவு செய்த நாள்
09 மார்2012
00:02

புதுடில்லி: சென்ற பிப்ரவரி மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 6 லட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டின் இதே மாதத்தில் வருகை தந்த சுற்றுலா பயணிகளை விட, 6.6 சதவீதம் (6 லட்சத்து 36 ஆயிரம் பேர்) அதிகமாகும் என, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதற்கும் முந்தைய 2010ம் ஆண்டில், இந்தியா வந்த அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15.1 சதவீதம் வளர்ச்சிகண்டு, 5 லட்சத்து 52 ஆயிரமாக உயர்ந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், நம் நாட்டிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 13 லட்சத்து 59 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் வருகை தந்தவர்களைவிட,7.9 சதவீதம் (12 லட்சத்து 59 ஆயிரம் பேர்) அதிகமாகும்.கணக்கீட்டு காலத்தில்,வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருவாய், 27.5 சதவீதம் வளர்ச்சிகண்டு, 13 ஆயிரத்து 430 கோடியிலிருந்து 17 ஆயிரத்து 125 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற பிப்ரவரி மாதத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம், ரூபாய் மதிப்பில் கிடைத்த வருவாய், 8,502 கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், கிடைத்த வருவாயைவிட, 11.1 சதவீதம் (7,653 கோடி ரூபாய்) அதிகமாகும். இது, 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், 15.2 சதவீதம் உயர்ந்து, 6,646 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.மதிப்பீட்டு காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையில் கிடைத்த வருவாய், 168.4 கோடி டாலரிலிருந்து 173 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டில், 143.4 கோடி டாலராக இருந்தது என, அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|