இந்திய தொழிலக கூட்டமைப்பின்தமிழக பிரிவிற்கு புதிய தலைவர்  இந்திய தொழிலக கூட்டமைப்பின்தமிழக பிரிவிற்கு புதிய தலைவர் ... நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில்...நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 4.3 சதவீதமாக குறைந்தது நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில்...நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 4.3 சதவீதமாக ... ...
வர்த்தகம் » ஜவுளி
பருத்தி ஏற்றுமதிக்கு தடை நீடிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2012
00:06

புதுடில்லி: பருத்தி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து, முடிவு எடுப்பதற்காக நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என மத்திய ஜவுளித் துறை செயலர் ரீட்டா மேனன் திட்டவட்டமாக தெரிவித்தார்.உள்நாட்டில் பருத்தி பற்றாக்குறையை தடுக்கும் நோக்கில், சென்ற 5ம் தேதி பருத்தி ஏற்றுமதிக்கு, அயல்நாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் (டீ.ஜி.எப்.டி.,) தடை விதித்தது. இதற்கு, ஜவுளித் துறை வரவேற்பு தெரிவித்தது. ஆனால், மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்து, தம்மை வர்த்தக அமைச்சகம் கலந்தாலோசிக்கவில்லை என்று தெரிவித்தார்.இதையடுத்து, அவர் பிரதமரிடமும் முறையிட்டார். இதையடுத்து, பிரதமர் உத்தரவின்படி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பருத்தி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து, அமைச்சகங்களுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதனால், எந்த முடிவும் எடுக்கப்படாமல், கூட்டம் முடிவடைந்தது.அதேசமயம், இது தொடர்பான பேச்சுவார்த்தை இன்றும் நடைபெறும் என வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய ஜவுளி துறை செயலர் ரீட்டா மேனன், பருத்தி ஏற்றுமதி மீதான தடை நீடிக்கும் என்று தெரிவித்தார். இதனிடையே, நடப்பு மார்ச் மாதம் 4ம் தேதி வரை, பருத்தி ஏற்றுமதி செய்ய பதிவு செய்த நிறுவனங்கள், தடையின்றி பருத்தியை ஏற்றுமதி செய்யலாம் என, டீ.ஜி.எப்.டி., தெரிவித்துள்ளது.Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் மார்ச் 10,2012
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)