பதிவு செய்த நாள்
10 மார்2012
10:42
சென்னை :நட்சத்திர விடுதிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான வரி விகிதத்தை அதிகரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய வரி முறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது. நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படும் விடுதிகளில் (ஸ்டார் ஓட்டல்) விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு, 12.5 சதவீதமும், நட்சத்திர அந்தஸ்து அல்லாத உணவகங்களுக்கு, 4 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இந்த இரண்டு வரி விகிதங்களையும் அதிகரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நட்சத்திர விடுதிகளுக்கு, இனி, 14.5 சதவீத வரியும், பிற உணவகங்களுக்கு, 5 சதவீத வரியும் விதிக்கப்படும். இதற்கான சட்டத் திருத்தம், கடந்த பிப்., 13ம் தேதி கொண்டுவரப்பட்டது. புதிய வரி விதிப்பு முறை, இன்று முதல் அமலாகிறது.ஆனால், 2007ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி வெளியான அறிவிப்பாணை, பிற உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கான வரியை, வெறும் இரண்டு சதவீதமாகக் குறைத்துள்ளது.
புதிய சட்டம், ஐந்து சதவீதத்துக்கு வலியுறுத்துவதால், நேற்று மீண்டும் புதிதாக ஓர் அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, பிற உணவகங்களுக்கான வரி வீதம் இரண்டாகவே தொடர, தமிழக அரசு வழி செய்துள்ளது.சட்டம் நிறைவேற்ற வேண்டுமானால், சட்டசபையைக் கூட்டி, ஒப்புதல் பெற வேண்டும். அறிவிப்பாணையை, அரசுச் செயலர்களே வெளியிட்டுக் கொள்ளலாம். எனவே தான், சட்டப்படி அதிக வரியை விதித்த அரசு, அறிவிப்பாணை மூலம் அதைக் குறைத்துள்ளது. இதே போல, வணிக வரிகள் துறைச் செயலர் சுனீல் பாலிவால், நேற்று வெளியிட்ட மற்றொரு அறிவிப்பாணையில், "<உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் விற்கப்படும் மினரல் வாட்டர் பாட்டிலுக்கு, 2 சதவீதம் வரி விதிக்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அவற்றை வாங்கும்போது, ஏற்கனவே அவர்கள், 12.5 சதவீத வரி செலுத்தியிருப்பர். அந்தத் தொகையில், இந்த 2 சதவீதம் கழித்துக் கொள்ளப்படாது. தனியாகத் தான் இதைச் செலுத்த வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|