பதிவு செய்த நாள்
16 மார்2012
12:12

புதுடில்லி : 2012-2013ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், பங்குசந்தையில் சிறு முதலீட்டாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள ராஜிவ் ஈக்விட்டி திட்டத்தின் மூலம், ரூ. 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு 50 சதவீத வரி விலக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த நிதியாண்டில், 7300 கி.மீ. அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான காண்ட்ராக்ட்கள், இந்த நிதியாண்டில், 8,800 கி.மீ,.களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமானத்துறையில் ரூ. 1 பில்லியன் அளவிற்கு முதலீடு செய்யப்பட உள்ளது. மின்துறையை மேம்படுத்த ரூ.10 கோடி. நடப்பாண்டு முதல் சேவை வரியை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசு நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், ரூ. 30 ஆயிரம் கோடி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதியைகையாள்வதில் கூடுதல் சுதந்திரம், சில்லரை வணிகத்தில், அந்நிய நேரடி முதலீடு குறித்து மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து உருவாக்கப்படும் என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|