பதிவு செய்த நாள்
17 மார்2012
00:20

சென்னை:கண் கண்ணாடிகள் மற்றும் காண்டாக்ட் லென்ஸ் விற்பனையில் ஈடுபட்டு வரும் டைட்டன் ஐ ப்ளஸ் நிறுவனம், சென்னை கந்தன் சாவடியில் தனது 16வது புதிய விற்பனை மையத்தை திறந்துள்ளது.இது குறித்து டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் (கண் கண்ணாடிகள் பிரிவு) நிறுவனத்தின் தலைவர் ஜெகந்நாத் கூறியதாவது:
இப்புதிய விற்பனை மையம் 530 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சர்வதேச அளவில் பிரபலமான பிராண்டுகளின், கண் கண்ணாடிகள், குளிர் கண்ணாடிகள் மற்றும் காண்டாக்ட் லென்ஸ்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு உள்ளன. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப, கண்ணாடி பிரேம்களின் விலை, 495 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. மேலும், காண்டாக்ட் லென்ஸ்களின் விலை 345 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
தென்னிந்தியாவில் திறக்கப்பட்டுள்ள 67வது விற்பனை மையம் இதுவாகும். இதையடுத்து, தமிழகத்தில் நிறுவனத்தின் விற்பனை மையங்கள் 67 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதன் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு ஜெகந்நாத் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|