பதிவு செய்த நாள்
17 மார்2012
00:24

கோவை:மத்திய பட்ஜெட்டில், பம்ப்செட் மீது, மத்திய அரசின் கலால் வரி நீக்கப் படாததற்கு, கோவை பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம்"கோப்மா' கண்டனம் தெரிவித்துள்ளது."கோப்மா' சங்க தலைவர் மணிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் எதிர்பார்த்த அளவுக்கு சலுகைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள், மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் இல்லை. கோவை மாநகரில் பம்ப்செட் தொழில், 50 ஆயிரத்துக்கும் மேலான இளைஞர்களுக்கு, சுயவேலை வாய்ப்பு தரும் குடிசை தொழிலாக உள்ளது. இத்தொழிலுக்கு, மத்திய அரசு விதித்த நான்கு சதவீத கலால் வரியை நீக்கக்கோரி, கடந்த ஆறு ஆண்டுகளுக்கும்மேலாக,"கோப்மா' சங்கம் போராடி வருகிறது.
இந்த பட்ஜெட்டிலாவது, பம்ப்செட் மீதான கலால் வரியை மத்திய அரசு நீக்கும் என எதிர்பார்த்திருந்தோம்; கலால் வரி நீக்கப்படாததை கண்டிக்கிறோம். நாடு முழுவதும் செயல்படும் சிறு, குறுந்தொழில்களுக்கு, 25 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகை போதுமானதல்ல; யானைப் பசிக்கு சோளப்பொரி' போன்றதாகும். குறைந்தபட்சம், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|