பதிவு செய்த நாள்
17 மார்2012
10:10

சென்னையில், சிகரெட் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், 14.5 சதவீதம் பேர் புகை பிடிப்போர் என, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தமிழகத்தில், 1 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் புகை பிடிக்கின்றனர். இவர்களில், சென்னையில் 10 லட்சம் பேர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். பட்ஜெட்டில் புகையிலை பொருட்களுக்கான வரி அதிகரித்துள்ளதால், புகை பிடிப்போர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே, 5.50 ரூபாயாக இருந்த கிங்ஸ் கோல்ட் பில்டர் தற்போது, ஏழு ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே போல், நான்கு ரூபாயாக இருந்த கோல்டு பில்டர் ஐந்து ரூபாயாகவும், வில்ஸ் பில்டர் ஐந்து ரூபாயாக இருந்தது, தற்போது, ஆறு ரூபாயாகவும், 3.50 ரூபாயாக இருந்த கோல்டு பிளாக் தற்போது, 4.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே போல், 5.50 ரூபாயாக இருந்த சிக்ஸ் லைட்ஸ் சிகரெட் தற்போது, ஏழு ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|