தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் நிரந்தரமாய் அதிகரிக்கும்தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் நிரந்தரமாய் அதிகரிக்கும் ... மத்திய பட்ஜெட்டால் பங்குச் சந்தையில் கடும் சரிவு மத்திய பட்ஜெட்டால் பங்குச் சந்தையில் கடும் சரிவு ...
விமான போக்குவரத்தில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்:இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சர்வதேச விருது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2012
10:18

சென்னை:மேல்அடுக்கு வான்வெளி வழிகாட்டுதல் தொழில் நுட்பத்தை, சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு, சர்வதேச விருது கிடைத்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் மட்டுமே, இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின், வான்வெளி வழிகாட்டு சேவை அமைப்பின் சார்பில், சென்னை விமான நிலையத்தில், கடந்தாண்டு, மேல்அடுக்கு வான்வெளி வழிகாட்டுதலில், புதிய முறை அமல்படுத்தப்பட்டது. இப்புதிய தொழில் நுட்பத்தின்படி, தென்னிந்தியாவில் உள்ள விசாகப்பட்டினம், ஐதராபாத், பெல்லாரி (ரேடார்), மங்களூரு, பெங்களூரு, கொச்சின், திருவனந்தபுரம் உள்ளிட்ட விமான நிலையங்கள், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டன. இதன் மூலம், சிக்கல் இல்லாத வான்வெளி போக்குவரத்து மேலாண்மை, பயணிகள் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட பல பயன்கள் கிடைத்துள்ளன.
இப்புதிய தொழில் நுட்பம், சிறந்த முறையில் செயல்படுவது குறித்த அறிக்கையை, விமான போக்குவரத்து துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் அமைப்புகளுக்கு, விருது வழங்கும் ஜேன்ஸ் அமைப்பிற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் அனுப்பியது. அனைத்து தகவல்களையும் ஆய்வு செய்த அந்த அமைப்பு, மேல்அடுக்கு வான்வெளி வழிகாட்டும் தொழில் நுட்பத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, 2012ம் ஆண்டுக்கான ஜேன்ஸ் விருதை இந்திய விமான நிலையத்திற்கு வழங்கியுள்ளது.
இது குறித்து வான்வெளி வழிகாட்டும் அமைப்பின் (ஏ.என்.எஸ்.) உறுப்பினர் சோமசுந்தரம் கூறியதாவது:விமான போக்குவரத்தை பாதுகாப்பானதாகவும், சிக்கனமானதாகவும் மாற்றும் வகையில், ஒரு புதிய தொழில் நுட்பம் கடந்தாண்டு சென்னை விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ், தென்னிந்தியாவின் அனைத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகளை ஆய்வு செய்த பின், பெருமைக்குரிய ஜேன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
இப்புதிய தொழில் நுட்பத்தின் கீழ் விமானங்களுக்கு சிறப்பான முறையில் வழிகாட்டியதன் மூலம், 22.3 மில்லியன் லிட்டர் எரிபொருளும், 29.9 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு நிதியும் சேமிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மும்பை, டில்லி மற்றும் கோல்கட்டா உள்ளிட்ட நான்கு விமான தகவல் மண்டலங்களிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் டிசம்பருக்கும் இப்பணிகள் நிறைவடையும். அடுத்தாண்டு துவக்கத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும்.இவ்வாறு சோமசுந்தரம் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)