உலகின் பாரம்பரிய நிறுவனங்களாக டாடா ஸ்டீல், விப்ரோ தேர்வு!உலகின் பாரம்பரிய நிறுவனங்களாக டாடா ஸ்டீல், விப்ரோ தேர்வு! ... நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில்... மின் உற்பத்தி 75 சதவீத இலக்கை எட்டியது நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில்... மின் உற்பத்தி 75 சதவீத இலக்கை ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கோடையால் "பாடி ஸ்பிரே' விற்பனை ஜோர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2012
23:47

ஈரோடு:வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நறுமண பவுடர், "சன் கிரீம்' மற்றும் "பாடி ஸ்பிரே' விற்பனை அதிகரித்துள்ளது.கோடை வெயிலின் தாக்கம் தற்போது துவங்கியுள்ளது. சூரியக் கதிர்கள் நேரடியாக மக்களை தாக்குவதால், தோல் சுருக்கம், முகம் கறுத்து போகுதல், உடலில் அதிக வியர்வை துர்நாற்றம், சிறு கொப்புளம் உண்டா குதல் போன்ற பல்வேறு பிரச்னைக்கு ஆளாகின்றனர்.
இதிலிருந்து தப்பிக்க பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள், ஏராளமான நறுமண பொருட்களை இந்தியச் சந்தையில் களமிறக்கியுள்ளன.ஈரோடு, "ஸ்பார்க்கிலி பிராண்டட்' நறுமணப் பொருட்கள் விற்பனை நிலைய உரிமையாளர் கோகுலகிருஷ்ணன் கூறியதாவது:
இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் வாசனை பொருட்களை விற்பனை செய்கிறோம். மேல்தட்டு மக்கள் மட்டுமின்றி, அதிக விலையானாலும் நடுத்தர மக்களும் தங்களுக்கு பிடித்த வாசனை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
நறுமண பவுடர், ஸ்கின் கிரீம், பாடி ஸ்பிரே, சென்ட் போன்ற பிராண்டட் பொருட்கள் அதிகம் விற்பனையாகிறது.குளிர் காலத்துக்கும், கோடைக் காலத்துக்கும் ஏற்றவாறு நறுமண பொருட்கள், குறைந்தபட்சம், 99 முதல் 500 ரூபாய் வரையிலான விலையில் உள்ளன.
மார்ச் வெயில் அதிகமான பின், 60 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவ, மாணவியர், தொழிலதி பர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனர்.பெண்களுக்கான ஸ்பிரே வகைக ளான, டவ், நிவா, 185 ரூபாய், யூ.டி.வி., 195, கார்னியர், 150, ஸ்மார்ட், 155 ரூபாய் விலையில் உள்ளன. ஸ்கின் கிரீம் 100 முதல் 200 ரூபாய் விலையில் உள்ளன.
ஆண்களுக்கான ஸ்பிரே வகைகளான அடிடேட்ஸ், 165 ரூபாய், ப்யூல், 150, ரீபக், 165, கெட்ஸ்பை, 140, ஆக்ஸ், 135, புரூட், 175, 18ன் பிளஸ், 250, டவ், 175, செட் வெட், 175 ரூபாய் விலையில் உள்ளது. தவிர, டிரை ஸ்கின்னுக்கான லேக்மீ சன் எக்ஸ்பர் ஸ்கிரீம் 350 ரூபாய், டவ், நிவா ஸ்கிரீம் 150 ரூபாய்க்கு கிடைக்கிறது. இவ்வாறு கோகுலகிருஷ்ணன் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)