பதிவு செய்த நாள்
23 மார்2012
15:02
ஜெர்மனியை சேர்ந்த வோல்ஸ்வாகன் நிறுவனம், இந்தியாவில்,போலோ, வென்டோ, ஜெட்டா, பஸாத், நியூ பீட்டில், டவுரக் மற்றும் பைதான் ஆகிய மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் வென்டோ கார், கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு வகைகளிலும் விற்பனைக்கு கிடைத்தது. எனினும், தலா இரண்டு வேரியன்ட்கள் என நான்கு வகை வென்டோ கார்கள் தான் வெளி வந்தன. பெட்ரோல் பிரிவில், கூடுதலாக நடுத்தர விலை கொண்ட பிரீஸ் வேரியன்டும், இதன் பிறகு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட பெட்ரோல் காரும் அறிமுகப்படுத்தப்பட்டன. டீஸல் பிரிவில் மட்டும், குறைந்த விலை கொண்ட டிரன்ட்லைன் வேரியன்ட் காரும், விலை அதிகமான ஹைலைன் வேரியன்ட் காரும் தான் விற்பனை செய்யப்பட்டன. இதில் நடுத்தரமான வேரியன்ட் கார் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் தரப்பில் பலகாலமாக கோரப்பட்டு வந்தது.இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில், ஸ்கோடா நிறுவனம் ரேபிட் என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரில் பல வேரியன்ட்கள் வெளி வந்துள்ளன. மேலும், வென்டோ காரை விட விலையும் சற்று குறைவு. இந்த கடும் போட்டியை சமாளிக்க, வோல்ஸ்வாகன் நிறுவனம் தற்போது வென்டோ டீஸல் காரில், "கம்பர்ட்லைன்' என்ற வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் விலை மஹாராஷ்டிராவில் ரூ.8.56 லட்சம். இந்தியாவின் பிற நகரங்களில் இந்த காரின் விலை ரூ.8.74 லட்சமாக இருக்கும். வென்டோ காரில் உள்ள அனைத்து அம்சங்களும், இந்த புதிய காரில் இடம் பெற்றுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|