பதிவு செய்த நாள்
26 மார்2012
00:16

கோவை: உளுந்து மற்றும் பாசிப்பயறு விலை, மே மாதம் வரை உயர வாய்ப்பில்லை என்பதால், அவற்றை இருப்பு வைக்காமல் உடனே விற்குமாறு விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலையின், வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் அறிவுரை வழங்கியுள்ளது.இது குறித்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
தமிழகத்தின் முக்கிய பயிர்களாக உளுந்து, பாசிப் பயறு உள்ளன. கடந்த ஆண்டு, இப்பயறு வகைகளின் விலை உச்சத் தில் இருந்தது. நடப்பாண்டு, உற்பத்தி குறைவு என்றாலும், விலை ஏற்ற, இறக்கமின்றி ஒரே சீராக உள்ளது.இந்திய பருப்பு வகை மற்றும் தானிய சங்கத்தின் கணிப்பின்படி, கடந்த ஆண்டை போலவே, பருப்பு வகைகளின் இறக்குமதி இருக்கும். வேளாண் அமைச்சகத்தின், நான்காவது முன்கூட்டிய மதிப்பின்படி, இந்தியாவில், சென்ற 2010-11ம் ஆண்டில், ஒட்டு மொத்த பருப்பு வகைகளின் உற்பத்தி 1.90 கோடி டன்னாக இருந்தது.
ஆனால், இது நடப்பு 2011-12ம் ஆண்டில் இரண்டாம் மதிப்பீட்டின் படி,1.70 கோடி டன்னாக சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், பருப்பு வகைகளின் தேவை, 2கோடி டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசின், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறையின் கணக்கின்படி, இம்மாத இறுதியில், பருப்பு வகைகளின் இறக்குமதி 28 லட்சம் டன் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த ஆண்டு 26 லட்சம் டன்னாக இருந்தது.
இந்த ஆண்டு, பருப்பு வகைகளின் உற்பத்தி, கடந்த ஆண்டை விட, சற்று குறைவு என்றாலும், விலைகள் சீராக இருக்கும். நான்காம் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2010-11ல், இந்தியாவின் உளுந்து உற்பத்தி, 17.40 லட்சம் டன்கள் மற்றும் பாசிப் பயறின் உற்பத்தி, 18.20 லட்சம் டன்கள். தற்போது, தாளடி உளுந்தும், பாசிப்பயறும், அறுவடை சமயத் தில் உள்ளன.விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட ஆய்வில், நடப்பாண்டு ஏப்ரல்,மே மாதங்களில், உளுந்தின் விலை கிலோ, 34-37 ரூபாய், பாசிப்பயறின் விலை, 34-36 ரூபாய் என்ற அளவில் இருக்கும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. மே இறுதி வரை, விலை ஏற வாய்ப்பு இல்லை.
எனவே, விவசாயிகள் அறுவடை செய்யும் உளுந்தையும், பாசிப்பயிறையும் சேமித்து வைக்காமல், உடன் விற்பனை செய்யும்படி, பரிந்துரைக்கப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|