பதிவு செய்த நாள்
28 மார்2012
00:06
சென்னை: டி.வி.எஸ். குழுமம், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யுனிவர்சல் காம்பொனன்ட்ஸ் (யு.சி.) நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.இது குறித்து, டி.வி.எஸ் அண்டு சன்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் ஆர்.தினேஷ் கூறியதாவது: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யுனிவர்சல் காம்பொனன்ட்ஸ், வர்த்தக வாகனங்களுக்கான உதிரி பாகங்களை வினியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தை, டி.வி.எஸ். குழுமம், 100 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியுள்ளது.இது, இங்கிலாந்து நாட்டில், டி.வி.எஸ். குழுமம் மேற்கொள்ளும், இரண்டாவது கையகப்படுத்துதல் நடவடிக்கையாகும். இதற்கு முன், 2009ல், மல்டிபார்ட் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் கையகப்படுத்தப்பட்டது.தற்போது, யு.சி. நிறுவனத்தையும் கையகப்படுத்தியதையடுத்து, இங்கிலாந்து நாட்டில், டி.வி.எஸ் குழுமத்தின் ஆண்டு விற்று முதல், 1,000 கோடி ரூபாயை தாண்டும். மேலும், இதன் வாயிலாக, 500 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும். யு.சி. நிறுவனத்திற்கு, இங்கிலாந்தில், 420 வாடிக்கை நிறுவனங்கள் உள்ளன. இவை, 650க்கும் மேற்பட்ட வினியோக மையங்கள் மூலம் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்து வருகிறது. இவ்வாறு தினேஷ் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|