பதிவு செய்த நாள்
28 மார்2012
00:08

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டின் மார்ச் 15ம் தேதி வரையிலுமாக, இந்தியாவில் உள்ள முன்பேர சந்தைகளில், 173.69 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட, 54 சதவீதம் அதிகம் (113 லட்சம் கோடி ரூபாய்) என, பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.) தெரிவித்துள்ளது.தங்கம் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 91 சதவீதம் வளர்ச்சி கண்டு, 51.70 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 98.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.வேளாண் பொருட்கள் மீதான வர்த்தகம், 49 சதவீதம் அதிகரித்து, 13.61 லட்சம் கோடியிலிருந்து, 20.33 லட்சம் கோடி ரூபாயாகவும், எரிசக்தி, கச்சா எண்ணெய் மீதான வர்த்தகம், 24 சதவீதம் உயர்ந்து, 22 லட்சம் கோடியிலிருந்து, 27.36 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 7 சதவீதம் உயர்ந்து, 27.40 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு மார்ச் மாதம், 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலுமாக, எம்.சி.எக்ஸ். நிறுவனத்தில், 6.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர, என்.சி.டீ.இ.எக்ஸ். (85 ஆயிரத்து 588 கோடி ரூபாய்), என்.எம்.சி.இ. (25 ஆயிரத்து 807 கோடி ரூபாய்), ஐ.சி.இ.எக்ஸ். (8,912 கோடி ரூபாய்), ஏ.சி.இ. டெரிவேட்டிவ்ஸ் அண்டு கமாடிட்டீஸ் (6,706 கோடி ரூபாய்) ஆகிய முன்பேர சந்தைகளிலும் அதிகளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.தற்போது, உள்நாட்டில் தேசிய அளவில், ஐந்து முன்பேர சந்தைகளும், மாநில அளவில், 16 முன்பேர சந்தைகளும் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|