பதிவு செய்த நாள்
28 மார்2012
12:11

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. தற்போது அதில் இருந்து பிரிந்து, ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ் அண்டு ஸ்கூட்டர் இந்தியா என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிபிஆர் 250 ஆர் என்ற சொகுசு பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இந்த பைக்குக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, சிபிஆர் 150 ஆர் என்ற பைக்கை, கடந்த ஜனவரியில் நடந்த வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. தற்போது, சிபிஆர் 150 ஆர் பைக், விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என வேரியன்ட்களில் இந்த பைக் வெளி வந்துள்ளது. இதில் ஸ்டாண்டு வேரியன்ட் பைக்கின் விலை ரூ.1.16 லட்சம். டீலக்ஸ் பைக்கின் விலை ரூ.1.17 லட்சம். இரண்டு வேரியன்ட்களிடையேயும் பைக்கின் வண்ணம் மட்டுமே மாற்றமாக உள்ளது. இதில் 150 சிசி ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. சமீபத்தில் வெளியான பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கேடிஎம் டியூக் 200 பைக்குக்கு, சிபிஆர் 150 ஆர் பைக் கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|