பதிவு செய்த நாள்
01 ஏப்2012
11:12

பொள்ளாச்சி :வெளிமார்க்கெட்டில் ஒரு மாதத்துக்கு பிறகு கொப்பரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காங்கேயம் மார்க்கெட்டில், கடந்த ஒரு மாதமாக கொப்பரை கிலோ 38 ரூபாய்; தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின் 890 ரூபாய்; தேங்காய் பவுடர் கிலோ 68 ரூபாய் விலை கிடைத்தது. இவ்விலை அடிப்படையில் தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக கொப்பரை விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு 40- 41 ரூபாய்; தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 930 ரூபாய், தேங்காய் பவுடர் கிலோவுக்கு 70 ரூபாய் விலை கிடைத்தது.
விவசாயிகள் பறித்து உரித்த தேங்காய் 11 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்பட்டது.தோப்புகளில் விவசாயிகள் பறித்து இருப்பு வைத்திருக்கும் தேங்காய் ஒன்று 6.25 ரூபாய்க்கும், வியபாரிகள் பறித்துக்கொள்வதற்கு ஒரு தேங்காய்க்கு 5.50 ரூபாயும் விலை கொடுக்கப்பட்டது. கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறுகையில், "அரசு கொப்பரை கொள்முதல் துவங்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு கொப்பரை விலை கிலோ 40 ரூபாய்க்கு கீழ் வராது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு கொப்பரை விலை உயர்ந்து வருகிறது. ஏப்., முதல் வாரத்தில் இருந்து கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலை உயரும் வாய்ப்புள்ளது' என்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|