பதிவு செய்த நாள்
01 ஏப்2012
12:44

திண்டுக்கல்:அதிக விளைச்சலால் விலை கிடைக்காமல், வெங்காயத்தை செடியில் இருந்து பறிக்காமல் விட்டுள்ளனர். சிலர், சாலை ஓரத்தில் கொட்டி, தானம் செய்து வருகின்றனர். திண்டுக்கல் சின்னாளபட்டி, எரியோடு, வேடசந்தூர், குஜிலியம்பாறை, அய்யலூர், செங்குறிச்சி பகுதிகளில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் சந்தையில் இருந்து வெளி நாடுகளுக்கும்; ஒட்டன்சத்திரம் சந்தை மூலம் மற்ற மாநிலங்களுக்கும் செல்கின்றன. ஏற்றுமதியில் அதிக லாபம் கிடைத்ததால், இந்த ஆண்டு ஆர்வத்துடன் பயிரிட்டனர். இந்நிலையில், இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும், வெங்காய உற்பத்தி அதிகரித்தது. இதனால் ஏற்றுமதி வாய்ப்பு குறைந்துவிட்டது.
தேவைக்கு அதிகமாக உற்பத்தியானதால், உரிய விலை இல்லை.இதனால், திண்டுக்கல் பகுதிகளில், வயலில் இருந்து வெங்காயத்தை பறிக்காமல் விட்டுள்ளனர். சில விவசாயிகள், பறித்த வெங்காயத்தை ரோடு ஓரங்களில் கொட்டி வைத்துள்ளனர்.இதுகுறித்து ஜாதிக்கவுண்டன்பட்டி விவசாயி வீரன் கூறுகையில், ""ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. கிலோ 5 ரூபாய்க்கு, வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், செடியில் இருந்து பறித்து, அனுப்ப 5 ரூபாய் செலவாகும். இதனால் பறிக்கவில்லை. தெரிந்தவர்கள், இலவசமாக எடுத்துச் செல்கின்றனர்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|