பதிவு செய்த நாள்
01 ஏப்2012
15:24

விமானங்களுக்கான எரிபொருளின் கட்டணத்தை எண்ணெய் நிறுவனங்கள் 3 சதவீதம் உயர்த்தியுள்ளதால், பயணிகளுக்கான கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விமானங்களுக்கான எரிபொருள் கட்டணத்தை உயர்த்துவதாக இந்திய ஆயில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி டில்லியில் விமானங்களுக்கான எரிபொருள் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2.8 சதவீதம் அதாவது ரூ.1850.96-ஆக உயர்ந்து ரூ.67,800.30 ஆக இருக்கிறது. இந்த கட்டணம் உயர்வு இன்று(01.04.12) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இம்மாதத்தில் 3வது முறையாக விமான எரிபொருள் கட்டணம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே எரிபொருளின் கட்டண உயர்வால், சில விமான நிறுவனங்கள், விமான சேவைக்கான பயணிகள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இருந்தாலும் பயணிகளுக்கான கட்டணம் விகிதம் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|