ஏற்றுமதி ரூ.13.37 லட்சம் கோடியாக வளர்ச்சிஏற்றுமதி ரூ.13.37 லட்சம் கோடியாக வளர்ச்சி ... வாகன காஸ் விலை உயர்வு வாகன காஸ் விலை உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மார்ச் மாதத்தில் வாகன விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2012
01:31

புதுடில்லி : சென்ற மார்ச் மாதத்தில், முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், டீசல் கார்களுக்கான வரி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில், டீசல் கார்களுக்கான வரி விகிதங்கள் உயர்த்தப்படாததை அடுத்து, இத்துறை நிறுவனங்கள் மேற்கண்ட கார்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
மாருதி சுசூகி இந்தியா : இந்நிலையில், கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை, சென்ற மார்ச் மாதத்தில் 3.28 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 25 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை, 1 லட்சத்து 21 ஆயிரத்து 952 ஆக இருந்தது.
இருப்பினும், சென்ற முழு நிதியாண்டில் (2011-12), இந்நிறுவனத்தின் கார் விற்பனை, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 10.8 சதவீதம் சரிவடைந்து, 12 லட்சத்து 71 ஆயிரத்து 5 லிருந்து, 11 லட்சத்து 33 ஆயிரத்து 695 வாகனங்களாக குறைந்துள்ளது என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற மார்ச் மாதத்தில், மாருதி நிறுவனம், உள்நாட்டில், இதுவரை இல்லாத அளவிற்கு, 1 லட்சத்து 12 ஆயிரத்து 724 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 2.08 சதவீதம் (1லட்சத்து 10ஆயிரத்து 424 வாகனங்கள்) அதிகமாகும்.
இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 14.75 சதவீதம் வளர்ச்சிகண்டு, 11 ஆயிரத்து 528 என்ற எண்ணிக்கையிலிருந்து, 13 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது.
சென்ற முழு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை, 11.16 சதவீதம் குறைந்து, 11 லட்சத்து 32 ஆயிரத்து 739லிருந்து, 10 லட்சத்து 6 ஆயிரத்து 316 ஆக குறைந்துள்ளது. இதே நிதியாண்டுகளில், நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி, 7.87 சதவீதம் சரிவடைந்து, 1 லட்சத்து 38 ஆயிரத்து 266லிருந்து, 1 லட்சத்து 27 ஆயிரத்து 379 ஆக குறைந்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் : சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், தொழிற்சாலையைக் கொண்டுள்ள, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், சென்ற மார்ச் மாதத்தில், 59 ஆயிரத்து 229 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட, 6.62 சதவீதம் (55 ஆயிரத்து 552 கார்கள்) அதிகமாகும்.
இதே மாதங்களில், இந்நிறுவனம், உள்நாட்டில், மேற்கொண்ட கார்கள் விற்பனை, 22.94 சதவீதம் வளர்ச்சிகண்டு, 31 ஆயிரத்து 822லிருந்து, 39 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், ஏற்றுமதி, 15.27 சதவீதம் சரிவடைந்து, 23 ஆயிரத்து 730 லிருந்து, 20 ஆயிரத்து 107 ஆக குறைந்துள்ளது.
ஏற்றுமதியைவிட, நிறுவனத்தின் கார்களுக்கு உள்நாட்டில், அதிக தேவை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு சந்தைக்காக புதிய மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என, இந்நிறுவனத்தின் இயக்குனர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) அரவிந்த் சக்சேனா தெரிவித்தார்.
டாட்டா மோட்டார்ஸ் : டாட்டா குழுமத்தைச் சேர்ந்த டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்தில், 1 லட்சத்து 414 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 20 சதவீதம் (83 ஆயிரத்து 363 கார்கள்) அதிகம். சென்ற மார்ச் மாதத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வாகனங்கள் விற்பனையில், பயணிகள் கார் விற்பனை, உள்நாட்டில் 34 சதவீதம் வளர்ச்சிகண்டு, 27 ஆயிரத்து 678 என்ற எண்ணிக்கையிலிருந்து, 36 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின், "நானோ' கார் விற்பனை, 20 சதவீதம் உயர்ந்து, 8,707 என்ற எண்ணிக்கையிலிருந்து, 10 ஆயிரத்து 425 ஆக வளர்ச்சிகண்டுள்ளது. "இண்டிகா' கார் விற்பனை, 65 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து 420 ஆகவும், "இண்டிகோ' கார் விற்பனை, 15 சதவீதம் உயர்ந்து, 8,295 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம், சென்ற மார்ச் மாதத்தில், இந் நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி, 10 சதவீதம் சரிவடைந்து, 5,932லிருந்து, 5,367 ஆக குறைந்துள்ளது.
ஆடி இந்தியா : ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் ஆடி. இதன் துணை நிறுவனமான, ஆடி இந்தியா, சென்ற மார்ச் மாதத்தில், 1,002 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 47 சதவீதம் (681 கார்கள்) அதிகமாகும். நடப்பு 2012ம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில், இந்நிறுவனம், 2,269 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 41 சதவீதம் (1,611 கார்கள்) அதிகமாகும்.
நிசான் இந்தியா : சென்னை - ஒரகடத்தில், தொழிற்சாலையைச் கொண்டுள்ள, நிசான் இந்தியா நிறுவனம், சென்ற மார்ச் மாதத்தில், 5,880 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 180 சதவீதம் (2,101 கார்கள்) அதிகமாகும்.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்நிறுவனம், 33 ஆயிரத்து 275 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 155 சதவீதம் (13 ஆயிரத்து 43 கார்கள்) அதிகமாகும்.
டி.வி.எஸ். மோட்டார் : இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபடும், டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 21 லட்சத்து 98 ஆயிரத்து 142 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 7.41 சதவீதம் (20 லட்சத்து 46 ஆயிரத்து 541 வாகனங்கள்) அதிகம்.
சென்ற மார்ச் மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 1 லட்சத்து 82 ஆயிரத்து 527 ஆக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 4.48 சதவீதம் (1 லட்சத்து 91 ஆயிரத்து 81 வாகனங்கள்) குறைவு.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)