பதிவு செய்த நாள்
05 ஏப்2012
15:47
அமெரிக்காவில் உள்ள ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை இருந்த இடத்தில் இருந்தே 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதியினை கூகுள் ஏற்படுத்தி தந்துள்ளது.. அனைவருக்கு அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையினை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனை பூர்த்தி செய்யும் வண்ணமாக அமெரிக்க வெள்ளை மாளிகையை, கூகுள் ஆர்ட் ப்ராஜெக்ட் இணையதளத்தின் மூலம் எளிதாக பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது கூகுள். வெள்ளை மாளிகை என்பது தலைவர்களுக்கு மட்டும் அல்ல, பொதுவான மக்களுக்கும் சேர்த்து தான் என்று மிச்செல் ஒபாமா வீடியோ மூலம் தெரிவித்து இருக்கிறார். 360 டிகிரி ஸ்ட்ரீட் வியூ கேமரா தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி கூகுள் இந்த வசதியினை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் வெள்ளை மாளிகையை மிக அருகில் இருந்து பார்க்கும் ஒரு உணர்வை ஏற்படுத்தும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|