பதிவு செய்த நாள்
06 ஏப்2012
00:10

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -இரும்புத் தாது மற்றும் ரயில் சரக்கு கட்டணம் மிகவும் உயர்ந்துள்ளது. இதையடுத்து, தனியார் துறையை சேர்ந்த உருக்கு நிறுவனங்கள், மீண்டும் உருக்கு பொருள்கள் விலையை டன்னுக்கு 750 ரூபாய் முதல் 1,700 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன.என்.எம்.டீ.சி., நிறுவனம்சரக்கு ரயில் போக்குவரத்து கட்டண உயர்வு மற்றும் பொதுத்துறையை சேர்ந்த என்.எம்.டீ.சி., நிறுவனம் இரும்புத் தாது விலையை உயர்த்தியுள்ளதால், உருக்கு நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி பொருள்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், முதல் மற்றும் நான்காம் காலாண்டுகளுக்கு இடையே உருக்கு பொருள்கள் விலை 8.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் உருக்கு உற்பத்திக்கு மூலப் பொருளாக விளங்கும் இரும்புத்தாது விலை 13 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், என்.எம்.டீ.சி., நிறுவனம், இரும்புத் தாதுவின் விலையை டன்னுக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை, அவற்றின் தரத்திற்கேற்ப உயர்த்தியுள்ளது. சொந்தமாக இரும்புத் தாது சுரங்கமில்லாத உருக்கு நிறுவனங்களுக்கு, என்.எம்.டீ.சி. நிறுவனமே இரும்புத் தாதுவை அளித்து வருகிறது.பொதுத்துறையை சேர்ந்த செயில் நிறுவனம், சென்ற மார்ச் மாதம், உருக்குத் தகடு மற்றும் கம்பிகளின் விலையை டன்னுக்கு 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை உயர்த்தியது. இதே விலை, நடப்பு ஏப்ரல் மாதத்திற்கும் நீடிக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.எஸ்ஸார் ஸ்டீல்ஆனால், தனியார் நிறுவனங்கள், உருக்கு விலையை ஏற்கனவே உயர்த்தி விட்டன. எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம், அதன் உருக்கு பொருள்கள் விலையை 4 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. உருக்கு தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மும்பையை சேர்ந்த மற்றொரு நிறுவனம், உருக்கு பொருள்கள் விலையை டன்னுக்கு 750 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.டாட்டா ஸ்டீல் நிறுவனம், தற்போதைக்கு பழைய விலையே நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. எனினும், ஒரு சில பிரிவுகளில், இலகு மற்றும் நடுத்தர உருக்கு பொருள்களின் விலையை 2.5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் ( நிதி) நிதின் ஜோரி கூறும்போது,"விலை உயர்வு குறித்து சந்தைப்படுத்தல் பிரிவுடன் கலந்தாலோசித்து வருகிறோம். இம்மாத இறுதிக்குள் புதிய விலை அமலுக்கு வரும்' என்று தெரிவித்தார்.இந்நிலையில்,கடந்த ஆண்டு, சர்வதேச பொருளாதார நெருக்கடியால் மந்த நிலையில் இருந்த உலக உருக்கு துறை, நடப்பாண்டு மார்ச் முதல் சற்று எழுச்சி காணத் தொடங்கியுள்ளது. இதனால், பலதரப்பட்ட தொழில்களுக்கு உருக்கு தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வாகனம் மற்றும் கட்டுமானத் தொழில்கள் சுறுசுறுப்படைந்துள்ளன. இதன் காரணமாகவும், உள்நாட்டு உருக்கு நிறுவனங்கள் உருக்கு உற்பத்தியை அதிகரித்து, அவற்றின் விலையை துணிந்து உயர்த்தி வருகின்றன.சீன நாடு சீனாவில் உருக்கு பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், சர்வதேச கச்சா உருக்கு உற்பத்தி, சென்ற ஜனவரியை விட பிப்ரவரியில் சற்று உயர்ந்துள்ளது. அதே சமயம், ஐரோப்பாவில், சென்ற மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில், உருக்கிற்கான தேவை 1.5 சதவீதம் குறையும் என எஸ்.எம்.சி. நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறக்குமதி வரிநடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், உருக்கு தகடுகளின் இறக்குமதி வரி 7.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மலிவான உருக்கு பொருள்கள் இறக்குமதியால், உள்நாட்டு உருக்கு நிறுவனங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சர்வதேச அளவில், குறிப்பாக "கோக்கிங் கோல்' எனப்படும் அதிக எரிதிறன் கொண்ட நிலக்கரியின் விலை உயரத் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும், இந்தோனேஷிய அரசு, நிலக்கரி மீதான ஏற்றுமதி வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பதும், உருக்கு பொருட்கள் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|