பதிவு செய்த நாள்
06 ஏப்2012
09:58

சென்னை:'தொடர் விடுமுறை காரணமாக, நாளை வங்கிகள் முழு நேரம் இயங்கும்' என, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆண்டு கணக்கு முடிப்பு, மகாவீரர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளி என, இந்த வாரம் மூன்று நாட்கள், வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அமைந்துவிட்டன. இந்த தொடர் விடுமுறையால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஓரளவிற்கு ஈடுசெய்ய, நாளை (7ம் தேதி), பொதுத் துறை வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளையும் முழுநேரம் இயக்க, வங்கி நிர்வாகங்களை, நிதி அமைச்சகம் பணித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு ரிசர்வ் வங்கி மூலம், அனைத்து வங்கி நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இதுகுறித்து, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சனிக்கிழமையில் வழக்கமாக, காலை 10 முதல், மதியம் 2 மணி வரை தான் வங்கிகள் செயல்படும். நாளை மட்டும், தமிழகத்தில் உள்ள பொதுத் துறை வங்கிகள் உட்பட, அனைத்து வங்கிகளும், காலை 10 முதல் மாலை 5 மணி வரை, முழு நேரம் செயல்படும். மதியம் 2 மணி முதல் மாலை 5 வரையிலான பணியை, கூடுதல் நேரமாகக் கருத வேண்டும் என, நிதி அமைச்சகத்தை கோர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|