பதிவு செய்த நாள்
06 ஏப்2012
10:48

மதுரை : மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தமிழகத்தில் நகைக் கடை உரிமையாளர்களின் 5 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தால், ரூ.280 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது. மார்ச் 16 ல் தாக்கலான மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரி 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், ஒரு சதவீதம் கலால்வரி செலுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு நகைக் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 17 முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கடையடைப்பில் ஈடுபட்டனர். மத்திய அரசு கண்டுகொள்ளாததால், நேற்று முதல் ஏப்.,10 வரை மீண்டும் கடையடைப்பில் ஈடுபட்டனர். நகைக்கடை உரிமையாளர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது : கடையடைப்பால் ரூ.200 கோடியும், அரசுக்கு வரியாக கிடைக்க வேண்டிய ரூ.80 கோடியும் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இரண்டாம் கட்ட போராட்டத்திற்கு பிறகு, வரிவிதிப்பை குறைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலனை செய்யாவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும், என்றார்.
இதற்கிடையே, தங்கம் மீதான வரிவிதிப்பை குறைப்பது குறித்து, டில்லியில் இன்று(ஏப்., 6) மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி ஆலோசிக்க உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|