பதிவு செய்த நாள்
06 ஏப்2012
12:35

தென் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை கொண்ட கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இருப்பினும், சொனட்டா போன்ற வகை கார்களையும் ஹுண்டாய் விற்பனை செய்து வருகிறது. ஜனவரி மாதம் டில்லியில் நடந்த வாகன கண்காட்சியில், சொனட்டா ப்ளூயிடிக் காரை அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பள் செய்யப்படுகிறது. 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டைரக்ட் இன்ஜெக்ஷன் என்ற தொழில்நுட்பமும் இடம் பெற்றுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. இதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட காரின் விலை ரூ.18.53 லட்சம்; ஆட்டோமேடிக் வசதி கொண்ட காரின் விலை ரூ.20.61 லட்சம். ஹோண்டாவின் அக்கார்டு, ஸ்கோடாவின் சூப்பர்ப், டொயோட்டோவின் காம்ரே மற்றும் வோக்ஸ்வாகனின் பஸாத் ஆகிய கார்களுக்கு இந்த கார் கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியர் பார்க்கிங் கேமரா, 10 வகையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், 4 வகையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க சீட் என பல அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|