பதிவு செய்த நாள்
10 ஏப்2012
14:16
வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களில் உள்ள உதிரி பாகங்களில் ஏதாவது பிரச்னை என்றால், குறிப்பிட்ட மாடல் கார்களை திரும்ப அழைத்து, பிரச்னையை சரி செய்து தருவர். இந்தியாவிலும் இதுபோன்ற நடைமுறை அவ்வப்போது மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிப்படையாக திரும்ப அழைக்காமல், கார்கள் சர்வீஸுக்கு வரும் போது, பழுதான உதிரி பாகத்தை மாற்றி கொடுப்பர். அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும், மானஸா காரில் முக்கிய உதிரி பாகம் ஒன்று, இலவசமாக மாற்றிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் கேட்ட போது, காரின் சஸ்பென்ஷன் பகுதியில் உள்ள, ' ஆன்டி -ரோல் பார் புஷ்' என்ற பிளாஸ்டிக் உதிரி பாகம் மாற்றித் தரப்படுகிறது. மானஸா கார்கள், சர்வீஸுக்கு வரும் போது, டாடா மோட்டார்ஸின் டீலர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்கள், இந்த மாற்றத்தை செய்து கொடுக்கின்றனர். இதற்கு கூடுதல் கட்டணம் இல்லை. இலவசமாக செய்து கொடுக்கின்றனர். இதுநாள் வரை விற்பனை செய்யப்பட்ட அனைத்து மானஸா கார்களிலும், இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|