பதிவு செய்த நாள்
19 ஏப்2012
23:44
புதுடில்லி: இந்திய வெங்காயத்திற்கு வங்கதேசத்தில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், இந்தியாவிலிருந்து அதிக அளவில் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொண்ட நாடுகளில், வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. அந்த நிதியாண்டில் இந்தியா 1,742 கோடி ரூபாய் மதிப்பிற்கான வெங்காயத்தை ஏற்றுமதி செய்துள்ளது.இதில், வங்கதேசத்திற்கு 572 கோடி ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில், மலேசியாவும் (463 கோடி ரூபாய்), மூன்றாவது இடத்தில், இலங்கையும் (176 கோடி ரூபாய்) இடம் பெற்றிருந்தன.மேலும், ஐக்கிய அரபு எமிரேட் (166 கோடி ரூபாய்), இந்தோனேசியா (90 கோடி ரூபாய்), பாகிஸ்தான் (54 கோடி ரூபாய்), சிங்கப்பூர் (29 கோடி ரூபாய்), நேபாளம் (25 கோடி ரூபாய்), ஓமன் (23 கோடி ரூபாய்) மற்றும் வியட்னாம் (21 கோடி ரூபாய்) ஆகிய நாடுகளுக்கும், நம் நாட்டிலிருந்து அதிகளவில் வெங்காயம் ஏற்றுமதியாகி உள்ளது.கடந்த 2008-09ம் நிதியாண்டில், இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி 1,827 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, 2009-10ம் ஆண்டில் 2,319 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆனால், கடந்த 2010-11ம் நிதியாண்டில், உள்நாட்டில் வெங்காய உற்பத்தி குறைந்ததை அடுத்து, இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால், அவ்வாண்டில் வெங்காய ஏற்றுமதி, 1,742 கோடி ரூபாயாக குறைந்து போனது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|