கயிறு பொருட்கள் ஏற்றுமதி  ரூ.850 கோடியை தாண்டியது கயிறு பொருட்கள் ஏற்றுமதி ரூ.850 கோடியை தாண்டியது ... தமிழகத்தில் உரம் விலை குறைவு தமிழகத்தில் உரம் விலை குறைவு ...
இந்தியாவில் குறைந்த செலவில் தரமான சிகிச்சை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2012
23:46

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2020ம் ஆண்டில் 24 லட்சமாக உயரும் என, ஆய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு நிலவரப்படி 6 லட்சமாக இருந்தது.ஆயுர்வேதம்இந்தியாவில் பன்முக சிறப்பு மருத்துவமனைகள் பல உள்ளன. திறமையான மருத்துவர்களும், சிகிச்சை செலவு குறைவாக உள்ளதாலும், ஏராளமான வெளிநாட்டினர் இந்தியாவில் சிகிச்சை பெற அதிக அளவில் வருகின்றனர். உலகில் வேறெங்கும் இல்லாத வகையில், ஆயுர்வேத மருத்துவத்திலும் இந்தியா சிறந்து விளங்குகிறது. இதன் காரணமாகவும், அயல்நாடுகளில் இருந்து இச்சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால், வரும் 2025ம் ஆண்டில், மருத்துவ சுற்றுலா துறை, 49 லட்சத்திற்கும் மேலான அயல்நாட்டினரை ஈர்க்கும் என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வருவோரில், 55 சதவீதம் பேர் ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் இருந்து வருகின்றனர். கடந்த 2010ம் ஆண்டு நிலவரப்படி, இந்திய மருத்துவ சுற்றுலா துறையின் சந்தை மதிப்பு 4,500 கோடி ரூபாயாக உள்ளது. இது, வரும் 2020ம் ஆண்டில், 62 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்றும், 2025ம் ஆண்டில் இது, 2 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.இத்துறை, அடுத்த, 15 ஆண்டுகளில் 30 சதவீதம் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2010ம் ஆண்டில், டெல்லி அருகேயுள்ள தேசிய தலைநகர பிராந்தியத்தில், அப்போலோ ஆஸ்பிட்டல்ஸ், போர்டிஸ் ஹெல்த்கேர் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகிய மூன்று மருத்துவமனைகளில் மட்டும் அயல்நாடுகளை சேர்ந்த, 15 ஆயிரத்து 500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. @மற்கு ஆசிய நாடுகள்இதில், 25 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து போர்டிஸ் மற்றும் மேக்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இப்பிராந்தியத்தில் இருந்து வந்தவர்களில், 5ல் ஒரு பங்கு நோயாளிகள், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.குறைந்த செலவுஇந்தியாவில் அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் அதிகரித்து வருவதும், குறைந்த செலவில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதும், அயல்நாட்டினரை வெகுவாக ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.குறிப்பாக, அமெரிக்காவில் இதயநோய்க்கான பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு 70 ஆயிரம் டாலர் முதல் 1 லட்சத்து 33 ஆயிரம் டாலர் வரை (35 - 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை) செலவாகிறது. தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற இதர நாடுகளில், 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டாலர் வரை (8-10 லட்சம் ரூபாய் வரை) செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், இந்தியாவில் இச்சிகிச்சையை 7,000 டாலர் (3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) செலவில் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று, இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவில் 75 ஆயிரம் முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் டாலர் வரையிலும் (37 லட்சத்து 50 ஆயிரம் முதல் 70 லட்சம் ரூபாய்), தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளில் 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டாலர் வரையிலும் (11 லட்சம் முதல் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால், இந்தியாவில் 9,500 டாலர் (4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்) செலவில் இச்சிகிச்சையை மேற்கொள்ள முடியும். இடுப்பு அல்லது மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு, அமெரிக்காவில் 30 ஆயிரம் முதல் 55 ஆயிரம் டாலர் (15 லட்சம் முதல் 27 லட்சத்து 50 ஆயிரம்) வரையும், தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளில் 9,000 முதல் 12 ஆயிரம் டாலர் (4 லட்சத்து 50 ஆயிரம் முதல் 6 லட்சம் ரூபாய் ) வரையும் செலவாகிறது. இதே சிகிச்சையை இந்தியாவில் 7,200 டாலர் செலவில் செய்து கொள்ள முடிவதால், வெளிநாட்டினர் பலர் நம்நாட்டிற்கு வருகின்றனர்.அறுவை சிகிச்சைமுகத்தை அழகுபடுத்துவதற்கான அறுவை சிகிச்சை செலவும், இதர நாடுகளை விட இந்தியாவில் குறைவாகவே உள்ளது. அமெரிக்காவில், இச்சிகிச்சைக்கு 16 ஆயிரம் டாலர் (8 லட்ச ரூபாய்)செலவாகிறது. இதே முக அறுவை சிகிச்சைக்கு சிங்கப்பூரில் 7,500 டாலரும் (3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்), தாய்லாந்தில் 5,000 டாலரும் (2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 4,800 டாலர் (2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்) செலவில் இச்சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)