பதிவு செய்த நாள்
21 ஏப்2012
06:55

புதுடில்லி: நடப்பாண்டில், "ஏசி' விற்பனை, 25 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய எரிசக்தி கொள்கைப்படி, "ஏசி' தயாரிப்பு நிறுவனங்கள், குறைந்த மின்சக்தியில் இயங்கும் வகையில், "ஏசி' சாதனங்களை தயாரித்து வருகின்றன. இதனால், இந்நிறுவனங்களின் உற்பத்தி செலவு, 15-20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.இத்தகைய இடர்பாடுகளால், "ஏசி' தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தி செலவை ஈடுகட்டும் வகையில், "ஏசி' சாதனங்களின் விலையை, 20-25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, "ஏசி' வாங்குவோருக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதனால், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், "ஏசி' சாதனங்கள் விற்பனை, 25 சதவீதம் குறையும் என , அசோசம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|