பதிவு செய்த நாள்
21 ஏப்2012
06:56

புதுடில்லி": மொபைல் போன் சேவை நிறுவனங்கள், ஏதாவது ஒரு திட்டத்தில், வினாடி அடிப்படையில் கட்டண திட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என, இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.நிமிட அடிப்படைதற்போது, பல நிறுவனங்கள் மொபைல் போன் வாடிக்கையாளர்களிடம் ஒரு நிமிட அடிப்படையில் கட்டணம் வசூலிக்கின்றன. அதனால், ஒரு நிமிடத்திற்கு குறைவாக பேசினால் கூட, வாடிக்கையாளர்கள் ஒரு நிமிடத்திற்கான முழு தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, மொபைல் போனில், வினாடி அடிப்படையில் கணக்கிடும் நடைமுறையை டிராய் கட்டாயமாக்கியுள்ளது.
குறுந்தகவல்கள்இதன்படி,மொபைல் போன் சேவை நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட 25 திட்டங்களில், ஒரு திட்டத்திலாவது வினாடி அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வேண்டும்.சர்வதேச அழைப்புகளுக்கான ஆயுட்கால ப்ரீபெய்டு திட்டத்தில், குறிப்பிட்ட காலம் வரை வேறு திட்டங்களுக்கு மாறுவதற்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைகாட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் மொபைல் போன் வாயிலாக பேசுவதற்கும், குறுந்தகவல்கள் அனுப்புவதற்குமான கட்டணத்தை நான்கு மடங்காக அதிகரித்து கொள்ளவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|