பதிவு செய்த நாள்
21 ஏப்2012
06:59

புதுடில்லி: சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் கனிமங்கள் உற்பத்தி, மதிப்பின் அடிப்படையில், 16 ஆயிரத்து 566 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி மதிப்பை விட, 2.67 சதவீதம் (17 ஆயிரத்து 20 கோடி ரூபாய்) குறைவாகும் என, மத்திய கனிம வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டின் மொத்த கனிமங்கள் உற்பத்தி மதிப்பில், கச்சா எண்ணெய், நிலக்கரி, இரும்புத்தாது, இயற்கை எரிவாயு, பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக் கல் ஆகிய ஆறு கனிமங்களின் பங்களிப்பு மட்டும், 95 சதவீதம் என்றளவில் உள்ளது.சென்ற பிப்ரவரி மாதம் வெளியான, நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணில், கனிமங்கள் (சுரங்கம்) துறை, 2.15 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி மதிப்பு, 5,406 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஜனவரியில், 5,725 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|