பதிவு செய்த நாள்
21 ஏப்2012
07:01

சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த முதலாவது காலண்டில், ஏ.சி.சி. மற்றும் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனங்களின் நிகர லாபம் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஏ.சி.சி. நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம், 152 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில், 350 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 50 சதவீத்திற்கும் கீழ் வீழ்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 2,556 கோடியிலிருந்து, 3,015 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே போல், அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 23 சதவீதம் குறைந்து, 407 கோடியிலிருந்து, 312 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 2,275 கோடியிலிருந்து, 2,748 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செயல்பாட்டு செலவினம் மற்றும் தேய்மான செலவுகள் அதிகரித்ததால் இவற்றின் நிகர லாபம் வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|