பதிவு செய்த நாள்
21 ஏப்2012
07:03

புதுடில்லி: நாட்டின் மருந்து துறை, சென்ற நிதியாண்டுடன் நிறைவடைந்த ஓராண்டு காலத்தில், 16 சதவீதம் வளர்ச்சிகண்டுள்ளது. சென்ற மார்ச் மாதத்தில் மட்டும், இத்துறையின் வளர்ச்சி, 22 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்த 18 மாதங்களில் இல்லாத வளர்ச்சியாகும்.சென்ற மார்ச் மாதத்தில், ஜி.எஸ்.கே.பார்மாசூட்டிகல்ஸ், சன் பார்மாசூட்டிகல்ஸ், ஆல்கெம் லேபரெட்டரீஸ் மற்றும் மேன்கைன்ட் பார்மா உள்ளிட்ட 10 முன்னணி நிறுவனங்களின் வளர்ச்சி, 24 சதவீதம் என்றளவில் உயர்ந்துள்ளது. மேலும், இத்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இரட்டை சதவீத வளர்ச்சி கண்டுள்ளன.
சென்ற ஓர் ஆண்டு காலத்தில், இத்துறையின் சந்தை மதிப்பு, 62 ஆயிரத்து 904 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, சென்ற மார்ச் மாதத்தில் மட்டும், 5,369 கோடி ரூபாய் என்றளவில் உயர்ந்துள்ளது.நாட்டின் மருந்து துறையில், 5.9 சதவீத சந்தை பங்களிப்புடன், அபாட் அண்டு சால்வி நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.இந்நிறுவனத்தைத் தொடர்ந்து, சிப்லா நிறுவனம், 5.3 சதவீத சந்தை பங்களிப்பைக் கொண்டு, இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜி.எஸ்.கே. மற்றும் சன் பார்மா நிறுவனங்கள் முறையே, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|