பதிவு செய்த நாள்
21 ஏப்2012
12:51

சென்னை : ""சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியை தரம் உயர்த்த, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில், ""நகர்ப்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய, கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, அவசர மகப்பேறு, அறுவை சிகிச்சை போன்றவற்றுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் 2,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையான சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய, கடந்த ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டு, 14 கோடி ரூபாய் செலவில் பல் மருத்துவக் கல்லூரிக்கு ஒரு புதிய அடுக்கு மாடிக் கட்டடத்தை கடந்த 3ம் தேதி திறந்து வைத்தேன். இந்த பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநில மக்களும் சிகிச்சை பெற வருகின்றனர்.
இந்த மருத்துவக் கல்லூரியின் தரத்தை மேம்படுத்தவும், கூடுதல் கட்டடம் கட்டுவதற்கும், புதிய பணியிடங்களை உருவாக்கவும், இதை ஒப்புயர்வு மையமாக, அதாவது, "சென்டர் ஆப் எக்சலன்ஸ் இன் டெண்டிஸ்ட்ரி' ஆக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்'' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|