பதிவு செய்த நாள்
21 ஏப்2012
14:10

நிக்கன் நிறுவனம் ஒரு புதிய நிக்கன் டி3200 என்ற கேமராவைக் களமிறக்கியுள்ளது. குறிப்பாக டி3200 கேமரா 24.2 எம்பி டிஎக்ஸ் பார்மட் சிஎம்ஒஸ் சென்சார், எக்ஸ்பீட் 3டிஎம் இமேஜ் ப்ராசஸிங் என்ஜின், 1080பி எச்டி வீடியோ ரிக்கார்டிங் வசதி மற்றும் ஆட்டோ போக்கஸ் போன்ற சிறப்பான வசதிகளுடன் வருகிறது. டிஜிட்டல் கேமராவை புதிதாக இயக்குபவர்களுக்கு இந்த கேமரா மிக உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த கேமராவோடு இணைத்து ஒரு கைட் மோடும் வழங்கப்படுகிறது. அதன் மூலம் இந்த கேமராவை எவ்வாறு இயக்குவது என்பதை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். மேலும் டிஜிட்டல் கேமராவில் அனுபவம் கொண்டவர்களும் இந்த கேமராவை மிக சூப்பராக இயக்கலாம். இந்த நிக்கன் கேமரா நவீன 11 எடிஎப் சிஸ்டம், 3டி கலர் மாட்ரிக்ஸ் மீட்டரிங் 2 மற்றும் 3 இன்ச் அளவில் 921கே டார் எல்சிடி திரை மற்றும் எச்டிஎம்ஐ அவுட்புட் போன்ற அட்டகாசமான வசதிகளுடன் வருகிறது. மேலும் இந்த புதிய கேமரா டபுள்யு-1 வயர்லஸ் மொபைல் அடாப்டர் கொண்டு வருவதால் இந்த கேமராவை மொபைல் போன்களுடன் மிக எளிதாக இணைக்க முடியும். அதுபோல் இதில் எடுக்கும் போட்டோக்களை ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் மற்றும் மொபைல்களுக்கு நேரடியாக அனுப்ப முடியும்.இந்த நிக்கன் கேமரா கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் வருகிறது. இந்த ஏப்ரல் மாதம் இறுதியில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.37000 மாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன..
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|