பதிவு செய்த நாள்
22 ஏப்2012
03:01

மும்பை:தங்க நகை கடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, வங்கிகள் கடன் வழங்க, புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இதனால், நிதி நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் என, இத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தங்க நகை கடன், குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. இது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மொத்த சொத்து மதிப்பில், 50 சதவீதத்திற்கு மேல், அடமான நகைகளை வைத்துள்ள, நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் குறைக்கப்பட வேண்டும். வங்கிகள், அவற்றின் மூலதன நிதியில், இத்தகைய நகை கடன் நிறுவனங்களுக்கு வழங்கும், 10 சதவீத கடனை, 7.5 சதவீதமாக குறைக்க வேண்டும். தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட அளவிற்குத்தான் கடன் வழங்க வேண்டும் என, வங்கிகள் வரையறையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
நாட்டில் தங்கத்திற்கான தேவை, அவற்றின் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கங்கள், தங்க நகைகளுக்கு கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|