பதிவு செய்த நாள்
22 ஏப்2012
03:02

புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின், ஜி.எஸ்.எம். மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 68 லட்சத்து 70 ஆயிரம் அதிகரித்து, 66 கோடியே 41 லட்சமாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.) தெரிவித்துள்ளது.உலகளவில், மொபைல் போன் பயன்பாட்டில், சீனா முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
உள்நாட்டில், ஜி.எஸ்.எம். மொபைல் சேவையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள், @பாட்டிப் @பாட்டு கொண்டு, பல்வேறு சலுகை கட்டணங்களை அறிவித்து வருகின்றன. இதனால், இந்நிறுவனங்களில் இணையும் வாடிக்கையாளர் எண் ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. ஜி.எஸ்.எம். சந்தையில், முதலிடத்தில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்தில், 25 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத் துக் கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண் ணிக்கை, 18 கோடியே 13 லட்சமாக உயர்ந்துள்ளது என, மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|