பதிவு செய்த நாள்
22 ஏப்2012
04:50

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 21.30 கோடி டாலர் (1,065 கோடி ரூபாய்) அதிகரித்து, 29 ஆயிரத்து 300 கோடி டாலராக (14 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 147 கோடி டாலர் குறைந்து (7,350 கோடி ரூபாய்), 29 ஆயிரத்து 293 கோடி டாலராக (14 லட்சத்து 64 ஆயிரத்து 650 கோடி ரூபாய்) குறைந்திருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டின் தொடக்கம் முதல், அன்னியச் செலாவணி கையிருப்பு 120 கோடி டாலர் (6,000 கோடி ரூபாய்) அளவிற்கு குறைந்துள்ளது. மேலும், நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 350 கோடி டாலர் (17 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 11.50 கோடி டாலர் உயர்ந்து, 25 ஆயிரத்து 800 கோடி டாலராக ( 12 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இதன் மதிப்பும், நடப்பு நிதியாண்டின் தொடக்கம் முதல், 130 கோடி டாலர் அளவிற்கு சரிவடைந்துள்ளது.கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, மாற்றம் ஏதுமின்றி 2,700 கோடி டாலராகவே உள்ளது. மேலும், எஸ்.டீ.ஆர் ன் மதிப்பு 1.4 கோடி டாலர் அதிகரித்து, 440 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்திருக்கும் செலாவணிகளின் மதிப்பு, 8.4 கோடி டாலர் உயர்ந்து, 290 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|