பதிவு செய்த நாள்
22 ஏப்2012
11:25

ஐ.டி.பி.ஐ., வங்கியின் நிகர லாபம் 23.2 சதவிதம் அதிகரித்து ரூ.2 ஆயிரத்து 32 கோடியாக இருக்கிறது. நவீன சேவைகளில் முன்னணி வங்கியாக மாறி வரும் ஐ.டி.பி.ஐ., வங்கி 2011-12ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி 2012ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய காலாண்டு நிகர லாபம் ரூ.771 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 49.42 சதவிகிதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே நிதியாண்டில் அந்த நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.516 கோடியாக இருந்து இருக்கிறது. மேலும் மார்ச் 31 2012ம் ஆண்டு முடிய ஐ.டி.பி.ஐ.யின் நிகரலாபம், கடந்த ஆண்டை விட 23.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,032 கோடியாக இருக்கிறது.
அதேபோல் ஐ.டி.பி.ஐ., மொத்த பண பரிவர்த்தனையும் 16 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. கடந்த 2011ம் ஆண்டில் ரூ.3,37,584 ஆக இருந்த பணபரிவர்த்தனை 31 மார்ச் 2012ம் ஆண்டு முடிய ரூ.3,91,651 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டில் 816 கிளைகளாக இருந்த ஐ.டி.பி.ஐ. 2012ம் ஆண்டில் 973 ஆக உயர்ந்து இருக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|