பதிவு செய்த நாள்
22 ஏப்2012
12:40

எஸ்.பி.பி.ஜே வங்கியின் நிகர லாபம் 32 சதவீதம் அதிகரித்து ரூ.247.80 கோடியாக இருக்கிறது. எஸ்.பி.ஐ., வங்கி குழுமத்தை சேர்ந்த ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிகர் அண்ட் ஜெயப்பூர் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்த 2011-12-ஆம் நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் ரூ.247.80 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் 4-வது காலாண்டை காட்டிலும் 32 சதவீதம் அதிகமாகும். அதேபோல் இவ்வங்கியின் டெபாசிட் மற்றும் கடன்களும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் வங்கியின் டெபாசிட் 14.4 சதவீதம் அதிகரித்து ரூ.61,572 கோடியாகவும், கடன் 20 சதவீதம் அதிகரித்து ரூ.49,986 கோடியாகவும் அதிகரித்து இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டியில் 165 சதவீத டிவிடெண்டு வழங்கியிருந்த இவ்வங்கி இந்தாண்டில் 145 சதவீத டிவிடெண்டு வழங்க எண்ணியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|