பதிவு செய்த நாள்
22 ஏப்2012
14:57

நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 235 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில், முட்டை விலை, 20 காசுகள் வீதம் ஏற்றம் கண்டிருப்பது, கோழிப்பண்ணையாளர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 230 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஐந்து காசுகள் உயர்த்தி, 235 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலை, 20 காசுகள் ஏற்றம் கண்டிருப்பது, கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம்: சென்னை, 237 காசுகள், பெங்களூரு, 233 காசுகள், மைசூரு, 228 காசுகள், ஹைதராபாத், 209 காசுகள், மும்பை, 241 காசுகள், விஜயவாடா, 207 காசுகள், கோல்கத்தா, 245 காசுகள், பார்வாலா, 227 காசுகள், டில்லி, 240 காசுகள். இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 35 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை கிலோ, 62 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|