பதிவு செய்த நாள்
22 ஏப்2012
16:13

அதிகளவு டீசல் கார்களை உற்பத்தி செய்ய ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. டீசல் விலையை காட்டிலும் பெட்ரோல் விலை அதிகம் என்பதாலும், பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், உலகில் உள்ள பலரும் டீசல் கார்களை அதிகம் விரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் முன்னணி கார் நிறுவனங்கள் பலரும் அதிகளவு டீசல் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளனர். இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனமும் டீசல் கார்களை அதிகளவு உற்பத்தி செய்ய முடிவெடுத்து இருக்கிறது. அந்த நிறுவனத்தின் வெர்னா மற்றும் ஐ-20 ரக கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், அந்த நிறுவனம் இந்த இரண்டு கார்களின் உற்பத்தியை இம்மாதத்திலிருந்து 50 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தற்போது இந்த இரண்டு வகை கார்களின் டீசல் மாடல்களின் உற்பத்தி மாதம் ஒன்றுக்கு ஒட்டு மொத்த அளவில் 7,000-ஆக உள்ளது. இனி எதிர்வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை 10,500-ஆக உயரும். மேலும் இவ்வகை கார்கள் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக டீசல் இன்ஜின்களை தென் கொரியாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|