பதிவு செய்த நாள்
25 ஏப்2012
01:01

புதுடில்லி:கடந்த 2011ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு 2012ம் ஆண்டில் இதுவரையிலுமாக, ஒட்டு மொத்த அளவில் நாட்டின் பங்கு வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு உள்ளது. பங்கு சந்தைகள்:இதையடுத்து, அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில், நடப்பாண்டில் இதுவரை யிலுமாக, 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. நடப் பாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி-மார்ச்), மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' 2,000 புள்ளிகள் அல்லது 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம்,கடந்த 2011ம் ஆண்டில், ஒட்டு மொத்த அளவில், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் சுணக்கமாகவே இருந்தது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை வெகுவாக குறைத்துக் கொண்டன. 'சென்செக்ஸ்' நிறுவனங்கள்:அதேசமயம், இந்நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீட்டில், நிகர அளவில், 2,700 கோடி ரூபாயை விலக்கி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பல நிறுவனங்களின் பங்குகளில், முதலீடு செய்கின்றன. என்றாலும்,நடப்பாண்டில்,இதுவரையிலுமாக,'சென்செக்ஸ்' கணக்கிட உதவும்30 நிறுவனங்களில், 24 நிறுவனங்களின் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்துள்ளன. குறிப்பாக, 24 'சென்செக்ஸ்' நிறுவனங்களில், 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. அதே சமயம், 'சென்செக்ஸ்'ன் 5 நிறுவனங்களில், 1,300 கோடி ரூபாய் மதிப்பிற்கான பங்குகளை விற்பனை செய்துள்ளன. பங்கு மூலதனம்ஒட்டு மொத்த அளவில், 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்கள், பங்கு மூலதன அளவை, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு, 20 சதவீத அளவிற்கு உள்ளது. இது, டாலர் மதிப்பின் அடிப்படையில், 10 ஆயிரம் கோடி டாலராகும். எச்.டீ.எப்.சி., நிறுவனம்:அண்மைக்கால புள்ளி விவரங்களின்படி, அன்னிய நிதி நிறுவனங்கள், வீட்டு வசதிக்கு நிதி உதவி வழங்கி வரும், தனியார் துறையைச் சேர்ந்த எச்.டீ.எப்.சி., நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கு மூலதனம் (நடப் பாண்டின் முதல் மூன்று மாதங்களில்) 59.01 சதவீதத்திலிருந்து, 65.81 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்நிறுவனம் தவிர, ஐ,டி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், லார்சன் அண்டு டூப்ரோ, பாரத ஸ்டேட் வங்கி, டி.சி.எஸ்., டாட்டா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களில், இவற்றின் பங்கு மூலதன அளவு அதிகரித்துள்ளது. இவைதவிர, இந்துஸ்தான் யூனிலிவர்,டாட்டாஸ்டீல்,விப்ரோ,பீ.எச்.இ.எல்.,சிப்லா,மகிந்திரா அண்டு மகிந்திரா, என்.டி. பி.சி., பஜாஜ் ஆட்டோ, ஜிந்தால் ஸ்டீல், மாருதி சுசூகி, டாட்டா பவர், ஹிண்டால்கோ, ஸ்டெர்லைட் இண்டஸ் டரீஸ் ஆகிய நிறுவனங்களிலும், அன்னிய நிறுவனங்கள் பங்கு மூலதனத்தை அதிகரித்து கொண்டுள்ளன. ஜனவரி முதல் நடப்பு ஏப்ரல் மாதம் வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், மேற்கண்ட நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதன அளவை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பார்தி ஏர்டெல்:அதேசமயம், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, ஹீரோ மோட்டோ கார்ப், கெயில் இந்தியா, டீ.எல்.எப். ஆகிய ஐந்து நிறுவனங் களில்,கொண்டிருந்த பங்கு மூலதனத்தை குறைத்துக் கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|