பதிவு செய்த நாள்
25 ஏப்2012
16:51

மும்பை : காலை முதலே ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வந்த இந்திய பங்குசந்தைகள் மாலையில் சரிவுடனேயே முடிந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருவதாலும், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும் நாட்டின் தர வரிசையை உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (எஸ் அண்ட் பி) அதிரடியாகக் குறைத்துள்ளது. எஸ். அண்ட் பியின் இந்த அறிவிப்பு இந்திய பங்குசந்தைகளில் எதிரொலித்தது. இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 56 புள்ளிகள் குறைந்து 17,151.29 ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 20.65 புள்ளிகள் குறைந்து 5,160.65 ஆகவும் இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெல், கெயில் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ., மகேந்திரா அண்ட் மகேந்திரா, எஸ்.பி.ஐ., போன்றவற்றின் பங்குகள் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சிறிது உயர்ந்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|